சத்தம் போட்ட fail ஆக்கிடுவேன் - மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த ஆசிரியர்.!
two peoples arrested for harassment case in gujarat
குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அந்த பள்ளியில் பணியாற்றும் 33 வயது ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி கடந்த மாதம் 26-ந்தேதி நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், பெண் குழந்தையை காப்பாற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி இருந்தார். அவரது பேச்சை பலரும் பாராட்டியதால் அந்த மாணவி பிரபலமானார்.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக கூறி அந்த மாணவியை ஒரு தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு மாணவியிடம் அத்துமீறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டதால் உன்னை தேர்வில் தோல்வி அடையச் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், ஆசிரியர் மீதும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியரின் நண்பர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
two peoples arrested for harassment case in gujarat