ஆந்திரா || ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் - தீவிர விசாரணையில் போலீசார்.!
two students sucide in andira
ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் நரேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரா மகன் மஞ்சுநாத். ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக். மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த சில நாட்களாக வகுப்புக்குச் செல்லாமல் அறையிலேயே தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில், மஞ்சுநாத் நேற்று காலை வகுப்புக்குச் செல்லாமல், தனது நண்பர்கள் அறையில் தங்கியுள்ளார். இதையடுத்து சக மாணவர்கள் வகுப்புக்கு சென்றுவிட்டு, காலை 11:30 மணிக்கு அறைக்கு வந்த போது மஞ்சுநாத், மின் விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதேபோன்று புள்ளகுர்லாபள்ளி பகுதியைச் சேர்ந்த கோபாலப்பா என்பவர் மகள் அகிலா அதே பல்கலைகழகத்தில் பெண்கள் விடுதியில் தங்கி எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவரும் நேற்று வகுப்புக்கு செல்லாமல் விடுதி அறையில் தூக்கிட்ட படி தொங்கியுள்ளார்.
இது தொடர்பாக, கிருஷ்ணன்கோயில் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி அங்கு வந்த போலீஸார் இருவரது உடலையும் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் ஒரே நேரத்தில் ஆந்திராவைச் சேர்ந்த, மாணவரும், மாணவியும் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two students sucide in andira