ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை - மீட்புப் பணி தீவிரம்.!
two years old baby fell down bore well in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் லச்யானா கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் - பூஜா. இந்த தம்பதிக்கு சாத்விக் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா வீட்டின் அருகில் உள்ள தனது விளைநிலத்தில் நேற்று முன்தினம் புதியதாக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்தார். ஆனால் அதில் தண்ணீர் வரவில்லை. இருப்பினும் அவர் அந்த ஆழ்துளை கிணற்றை மூடாமல் விட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் குழந்தை சாத்விக், விளைநிலத்திற்குள் தவழ்ந்து வந்தபோது திறந்த நிலையில் கிடந்த ஆழ்துளை கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடியபோது தான் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்தது தெரிந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டீல், "விரைவாக குழந்தையை மீட்க விஜயபுரா மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதாகவும், குழந்தை தனது பெற்றோருடன் பாதுகாப்பாக மீண்டும் இணைவதற்கு பிரார்த்தனை செய்ததாகவும்" தெரிவித்துள்ளார்.
English Summary
two years old baby fell down bore well in karnataga