எந்தவொரு காரணமும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது - ஐநா பொதுச் செயலாளர் - Seithipunal
Seithipunal


மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், இன்று மும்பை தாஜ் ஓட்டலில் 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

அதன்பின் பேசிய ஆண்டனியோ, பயங்கரவாதம் என்பது முழுமையான தீமை. எந்த காரணங்களும், சாக்குப்போக்கும், குறைகளும் ஒருபோதும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாது. இன்றைய உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. 

166 பேரின் உயிரை வாங்கிய மிகவும் கொடூரமான பயங்கரவாத செயல்நடைபெற்ற இங்கு நான் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். அவர்கள் இந்த உலகத்தின் ஹீரோக்கள். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இந்தியர்கள், உலகின் பிற பகுதிகளை சேர்ந்த குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் உலகளாவிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது ஐ.நா.வின் மைய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN Secretary General says No reason can justify terrorism


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->