இந்த காதலர் தினத்துல யாருக்கெல்லாம் காதல் கை கூடும்..? மிஸ் பண்ணிடாதீங்க..!
Who will get all the love on this Valentines Day
இன்று சர்வதேச காதலர் தினம். உலகெங்கும் உள்ள காதல் ஜோடிகள் இன்று தனது காதலை தனக்கு பிடித்தவர்களிடம் சொல்வதற்காக வித்தியாமான முறைகள், வினோதமான பரிசுகள், சுற்றுப்பயணங்கள் போன்றவற்றை பார்த்து,பார்த்து செய்வார்கள்.
ஆனால், என்ன தான் அவர்கள் செய்தாலும் சில நேரங்களில் நாளும், கோளும் அவர்களுக்கு நல்லதையும் செய்யும், தீமையையும் செய்யும். அந்த வைகையில் இந்த காதலர் தினத்தில் யாருடைய காதல்கள் கையை கூடும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
![](https://img.seithipunal.com/media/Untitled design (16)-dkg6h.jpg)
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட குண நலன்கள் உள்ளன. எந்த ராசியை சேர்ந்த பெண்கள் தங்களின் முதல் பார்வையிலேயே யாரேனும் ஒருவர் காதலை தெரிவிக்கும் போது உடனே அதற்கு சம்மதம் தெரிவிக்கக் கூடிய ராசிகள் என்று பார்க்கலாம்.
கடக ராசி
இவர்கள் இயல்பிலேயே மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் இந்த ராசியை சேர்ந்த பெண்கள் மிகவும் இரக்க குணம் மற்றும் பிறர் மீது அன்பானவர்களாக இருக்க கூடியவர்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் புதிய உறவுகளை, நண்பர்களை உருவாக்க நினைப்பார்கள்.
மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்படக்கூடியவர்கள். தங்களிடம் யாரேனும் காதலை வெளிப்படுத்தும் போது, அந்த நபர் மீது எந்த ஒரு குறையும் இல்லாத பட்சத்தில் உடனே சரி என கூறிவிட கூடியவர்களும் இவர்களே.
சிம்ம ராசி
இந்த ராசியை சேர்ந்த பெண்கள் எந்த ஒரு சூழலையும் சிறப்பாக கையாளக் கூடியவர்கள். அத்துடன், ஒவ்வொரு செயலையும் ஆழமாக யோசித்துச் செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள். தங்களின் செயல் மற்றும் உணர்வுகளை மிகவும் கவனமாக கையாள்பவர்கள்.
தங்களின் வார்த்தைகள், தனக்கு பிடித்த நபர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள் இவர்கள். அந்த வகையில் தனக்கு பிடித்த வகையில் உள்ள யாரேனும் ஒருவர், இவர்களிடம் காதலை வெளிப்படுத்தும் போது, அதை மகிழ்ச்சியாக உடனே ஏற்றுக் கொள்வார்கள்.
துலாம் ராசி
துலாம் ராசி பிறந்த பெண்களிடம்அர்ப்பணிப்பு குணம் அதிகமாக இருக்கும். இவர்கள் சுயமரியாதையாக இருக்க விரும்புவார்கள். பிறர்க்கும் மதிப்பளிக்க கூடிய இவர்கள், அதனால் பிறரிடம் அன்பும், மரியாதையுடனும் செயல்படுவார்கள். இந்த பெண்களுக்கு காதல் உறவு என்று வரும்போது, யாரும் இது அதில் தலையிட அனுமதிப்பதில்லை.
அதே சமயம் தனக்குப் பிடித்த நபர் காதலை வெளிப்படுத்தினால் அது மரியாதையுடன் ஏற்றுக் கொள்ள நினைப்பவர்களாக இருப்பார்கள். அத்துடன், திருமண வாழ்க்கையில் தன் துணை மீது அன்பையும், மரியாதையையும் கொடுக்க நினைப்பவர்கள்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி காதல் விஷயத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள கூடியவர்கள். இந்த ராசி பெண்கள் காதல் விஷயத்தில் சம்மதத்தைத் தெரிவிக்க அதிக நேரம் எடுப்பதில்லை. தனக்கு ஏற்ற நபராக அமைந்துவிட்டால் உடனே சரி என்று சொல்லிவிடுவார்கள்.
தன் துணையுடன் நேரத்தை செலவிடவும், பயணங்கள் செல்லவும் விரும்ப கூடியவர்கள் இவர்கள். செவ்வாய் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட ராசி என்பதால், இந்த ராசி பெண்கள் அதிகமாக அதிகம் கோபப்படுவார்கள். ஆனால், காதல் மற்றும் திருமண உறவில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். உறவுகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த கூடியவர்கள்.
மீன ராசி
இந்த ராசியை சேர்ந்த பெண்களுக்கு உள்ளுணர்வு மற்றும் கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் பிறர் மீது அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.
இந்த ராசியை சேர்ந்த ஆண்,பெண் காதல் மற்றும் திருமண உறவில் மிகவும் விசுவாசமான நபர்களாக இருப்பார்கள். இந்த ராசி சேர்ந்த பெண்கள் காதல் விஷயத்தில் மிகவும் குறும்புக்காரர்களாகவும், அதே நேரம் உறவைப் புதிதாக வைத்திருக்கும் நபர்களாகவும் இருப்பார்கள்.
English Summary
Who will get all the love on this Valentines Day