கேரளா || கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி காயம்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி காயமடைந்துள்ளார்.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பெரியா நகரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென மேம்பாலம் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கட்டிட தொழிலாளி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விபத்து குறித்து ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து ஏற்பட்ட பகுதியை மக்களவை எம்பி ராஜ்மோகன் உன்னிதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Under construction flyover collapses in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->