போதைப்பொருள் இல்லாத இந்தியா - அமித்ஷா வெயிடப்போவது என்ன? - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சர் அமித் ஷா போதைப்பொருள் இல்லாத இந்தியா என்பது குறித்த தகவல் தொகுப்பை வெளியிட உள்ளார். 

தலைநகர் டெல்லியில், வருகிற 18 ஆம் தேதியன்று மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் போதைப்பொருள் தடுப்புக்கான ஒருங்கிணைப்பு மையத்தின் 7-வது உயர்நிலைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அப்போது, அவர் தேசிய போதைப்பொருள் தடுப்புக்கு ‘மனஸ்’ என்ற உதவி மையத்தையும், ஸ்ரீநகரில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் மண்டல அலுவலகத்தையும் திறந்து வைக்க இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷா போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் வருடாந்தர அறிக்கை 2023-ஐயும், போதைப்பொருள் இல்லாத இந்தியா என்பது குறித்த தகவல் தொகுப்பையும் வெளியிட உள்ளார்.

இதில், போதைப்பொருள் தடுப்புக்கான ஒருங்கிணைப்பு மையம் என்பது மாநிலங்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்புக்காக கடந்த 2016-ல் அமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த அமைப்பு கடந்த 2019-ல் 4 நிலை உள்ளதாக மேலும் வலுப்படுத்தப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister amithsa published bothai illa india coming 18


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->