நக்சலைட் என்கவுண்டர் - பாதுகாப்பு படையினருக்கு அமித்ஷா பாராட்டு.!
union minister amitsha wishes to security forces for naxals encounter
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை பாதுகாப்பு படையினருக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் நடந்த மோதலில் 18 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு காட்டில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு ஒன்று துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளது.
இந்த சண்டையில், 18 நக்சலைட்டுகளும், மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படை பிரிவைச் சேர்ந்த ஒரு ஜவானும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நக்ஸலைட்டுகளுடன் போராடிய பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- “இன்று நமது வீரர்கள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மற்றும் கான்கரில் நமது பாதுகாப்புப் படையினரின் 2 தனித்தனி நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் பகுதியில் நக்சலைட்டுகள் வெடிக்க வைத்த வெடிகுண்டு (IED) வெடித்ததை அடுத்து, இரண்டு பாதுகாப்புப் படையினர் வெளியேற்றப்பட்டதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பில் ஒரு ஜவான் மற்றும் ஒரு அதிகாரியின் கண்களில் தூசி மற்றும் குப்பைகள் புகுந்தன, அவர்கள் இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
நாராயண்பூர் காவல்துறையினரின் கூற்றுப்படி, வெடிப்பில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. தாக்குதலுக்கு காரணமான கிளர்ச்சியாளர்களைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
union minister amitsha wishes to security forces for naxals encounter