குஜராத்தில் முதல் சொகுசு படகு சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் அமித்ஷா.! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் முதல் சொகுசு படகு சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் அமித்ஷா.!

அகமதாபாத் மாநகராட்சி மற்றும் சபர்மதி நதி மேம்பாட்டுக் கழகத்தால் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட  'அக்ஷர் நதி சுற்றுலாப் படகை’ நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

அதன் பின்னர் அவர் பேசியதாவது:-  "பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக பொறுப்பேற்றபோது சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கினார். 

அதிலும் குறிப்பாக, அகமதாபாத் வழியாக பாயும் சபர்மதி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் இந்த நிலையை மாற்ற சபர்மதி ஆற்றை தூய்மைப்படுத்த வென்றும் என்று பல்வேறு நடவடிக்கை எடுத்தார். 

அதற்காக ஆற்றங்கரை ஓரம் பூங்காவை உருவாக்கினார். இதனால் மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக இங்கிருந்து ‘அக்‌ஷர் ரிவர் குரூஸ்’ என்ற படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

இந்தப் படகு 30 மீட்டர் நீளத்தில் இரண்டு இன்ஜின்களைக் கொண்டிருக்கும். இந்த படகில், சுற்றுலா பயணிகள் இசையை கேட்டுக் கொண்டே இரண்டு மணி நேரம் பயணம் செய்யலாம். இங்கு சைவ உணவுகளும் பரிமாறப்படும். 

மேலும், இந்தப் படகில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 180 லைப் ஜாக்கெட்கள், தீ தடுப்பு அமைப்புகள், அவசரகால மீட்புப் படகுகள் உள்ளிட்ட வசதிகள் வைக்கப்பட்டுள்ளன.

மேக் இன் இந்தியா என்றத் திட்டத்தின் கீழ் ரூ 15 கோடி செலவில் இரட்டை என்ஜின்களுடன் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பயணிகள் சொகுசு படகு இது ஆகும்" என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union mminister amitsa start luxury ferry service in gujarat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->