திருமணமாகாத பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தாயின் பெயர் - அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


திருமணமாகாத பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகள், தங்களது சான்றிதழ்களில் தாயின் பெயரை மட்டும் குறிப்பிடலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணமாகாத தாய் மற்றும் பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இந்த சமூகத்தில் மரியாதை, தனிநபர் உரிமை, சுதந்திரத்தோடு வாழும் வகையில் அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களில் தாயின் பெயரை மட்டும் குறிப்பிடலாம் என்று, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருமணமாகாத பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையும் இந்நாட்டின் குடிமகன் தான். எனவே, அவருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் எந்த ஒரு உரிமையையும் நிராகரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த குழந்தைகளுக்கு இந்த நாட்டில் சுதந்திரம், மரியாதை, தனிநபர் உரிமையோடு வாழ முழு தகுதி உண்டு. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் குறுக்கிட முடியாது. அவ்வாறு நடந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

unmarried woman child birth certificate Mothers nameb High Court orders


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->