மணல் லாரி கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாப பலி! உ.பி.யில் சோகம்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், ஹர்தோய் பகுதியில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மணல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திர பிரதேசம், ஹர்தோய் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் இன்று அதிகாலை வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி சென்ற லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த எட்டு பேர் உயிருடன் மணலில் புதைந்தனர். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புல்டோசர் உதவியுடன் மணலில் புதையுண்ட உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிலிருந்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP sand laden truck overturns accident 8 killed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->