யுபிஐ பரிவர்த்தனை 49 சதவீதம் அதிகரிப்பு! ஒரே மாதத்தில் ரூ.20லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனை!
UPI transaction for Rs20 lakh crore in a single month
ஒரே மாதத்தில் ரூ.20 லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும் இது கடந்த ஆண்டை காட்டிலும் 49 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
2016 ஆம் ஆண்டு யுபிஐ நடைமுறைக்கு வந்ததிலிருந்து இந்தியா தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்தியாவாக வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போது சிறு குறு தொழில் செய்பவர்கள் கூட யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்துகிறார்கள். மக்கள் அனைவரும் எவ்வித பொருள் வாங்கினாலும் அதற்குரிய பணத்தை ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், ஜூன் மாதத்தில் பரிவர்த்தனை அளவு ரூ. 20.07லட்சம் போடி என கூறப்படுகிறது. இதுவே மே மாதத்தில் பரிவர்த்தனை அளவு ரூ. 20.45 லட்சம் கோடியாக இருந்தது. இதுவே மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 1.9 சதவீதம் குறைவாகும்.
உயர்ந்த நிலையில் ஆதார் கடை வைத்து பணவரத்தின முறையில் மே மாதத்தில் 9 கோடி ஏப்ரல் மாதத்தில் 9.5கோடி இருந்து ஜூன்மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்து 10 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 46.3 கோடியில் இருந்து ஜூன் மாதத்தில் சராசரியாக பரிவர்த்தனை தொகை ரூ. 66,903 கூடி எட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
UPI transaction for Rs20 lakh crore in a single month