விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.. 3 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 30 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று முன்தினம் இரவு தர்மசாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலாடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட டிஜே செட் உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியுள்ளது. இதையடுத்து டிஜே செட் அருகே நின்றிருந்த 4 பேர் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் 4 பேரும் தர்மசாலா சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் சுபாங்கர் ஓஜா என்ற நபர் உயிரிழந்தார். மீதமுள்ள 3 பேர் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vinayagar idols melting process 1 people death in odisha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->