கனமழை எதிரொலி - திருப்பதியில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்காமலும், அதிக நேரம் வரிசையில் காத்திருக்காமலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வி.ஐ.பி. பிரேக் தரிசன முறை அமலில் உள்ளது. 

இருப்பினும், இந்த பிரேக் தரிசனத்தை திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும், முக்கியமான விழாக் காலங்களின்போதும், பேரிடர் காலங்களின்போதும் சூழ்நிலைக்கு ஏற்ப ரத்து செய்வது வழக்கம். அந்த வகையில், நாளை மறுநாள் (16.10.2024) வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதாவது திருமலை மற்றும் திருப்பதியில் கனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை (15.10.2024) பரிந்துரை கடிதங்கள் பெறப்படாது என்றும், பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vip break dharisanam close in tirupathi temple for rain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->