ஏ கே 47 பல் செட்... வைரத்தில் தெறிக்கவிடும் சூரத் வியாபாரிகள்...
What is the description of Surat dealers who splash diamonds as AK 47 pistols
தங்கம் வெள்ளி வைரம் பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை அணிவது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. நம் நாட்டில் வைரம் என்றாலே நினைவுக்கு வருவது குஜராத் மாநிலத்தின் சூரத் நகர் தான். வைரத்திற்கு பெயர் போன இந்த நகரில் வைரத்தால் செய்யப்பட்ட பல் செட்டுகள் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. பல்வேறு விதமான மாடல்களுடன் வரும். இவை மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக வைர வியாபாரிகள் கூறுகின்றனர்.
முன்பெல்லாம் தங்க நகைகளில் பல்செட் செய்து அணிவது ஃபேஷனாக இருந்தது தற்போது வைரக் கற்களைபயன்படுத்தி செய்யப்பட்ட பல் செட்டுகள் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. 16 பற்களை கொண்ட இந்த செட்டுகள் மேல்தாடையில் ஆறு பொருட்கள் கீழ் தாடையில் அவ்வாறு பற்கள் என வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தங்கம் மற்றும் வெள்ளியைத் தவிர 2000 வைர கற்கள் பொருத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த வைர பல் செட்டுகளும் மோதிரம் மற்றும் நெக்லஸ் போன்றவற்றைப் போலவே ஜொலிப்புடன் இருப்பதால் வாடிக்கையாளர்கள் இவற்றை விருப்பமுடன் வாங்கி அணிகின்றனர். மேலும் இவை பல்வேறு டிசைன்களிலும் தயாரிக்கப்படுகின்றன பிஸ்டல் ஏகே 47, பட்டாம்பூச்சி போன்ற பல டிசைன்களில் இந்த வைர பல் செட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற பல் செட்டுகளைப் போலவே இவற்றை கழற்றி திரும்ப அணிவது சுலபம் என்பதால் மக்கள் விருப்பம் உடன் பயன்படுத்தி வருகின்றனர்.
வெள்ளி மற்றும் மோன்சோனைட் வைரத்தால் செய்யப்பட்ட 16 பற்களை கொண்ட செட்டின் விலை ஒரு லட்ச ரூபாய் வரை இருக்கிறது. தங்கம் மற்றும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரத்தால் செய்யப்பட்ட ஒரு பல்லின் விலை ஐந்து லட்ச ரூபாய் என தெரிகிறது. மேலும் தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட பல் செட்டின் விலை 25 லட்சம் முதல் 40 லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
English Summary
What is the description of Surat dealers who splash diamonds as AK 47 pistols