உ.பி : கை, கால்கள் கட்டபட்ட நிலையில் ஏரியில் மிதந்த இளம்பெண் - தீவிர விசாரணையில் போலீசார்.!! - Seithipunal
Seithipunal


உ.பி : காய், கால்கள் கட்டபட்ட நிலையில் ஏரியில் மிதந்த இளம்பெண் - தீவிர விசாரணையில் போலீசார்.!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் கோவர்தன் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத இளம் பெண் ஒருவரின் உடல் அரை நிர்வாணமாக அப்பகுதியில் உள்ள ஏரியில் மிதந்தது. 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் சம்பவ விரைந்து வந்து ஏரியில் கிடந்த கைகள் மற்றும் கால்கள் தாவணியால் கட்டப்பட்டு முகம் ஜாக்கெட்டால் மூடப்பட்டிருந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

அதன் பின்னர் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அந்த பெண் யார் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, " உயிரிழந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்" என்றுத் தெரிவித்துள்ளார். 

இளம்பெண்ணை கொலை செய்து ஏரியில் வீசியது யார்? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman body rescue lake in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->