மும்பையில் பரபரப்பு - ஓடும் ஆட்டோவில் இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை.! - Seithipunal
Seithipunal


மும்பையில் பரபரப்பு - ஓடும் ஆட்டோவில் இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை தத் நகர் பகுதியில் கைரானி சாலையில் நேற்று முப்பது வயது பெண்ணும், ஒரு ஆணும் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்த ஆண் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். 

உடனே அந்த பெண், ஆணிடம் இருந்து தப்பிக்க ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். இதற்கிடையே அந்த பெண்ணுடன் இருந்த நபரும் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பின்னர் அந்த ஆணுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் பலியான பெண் சாந்திவிலி சங்கார்ஷ் நகரை சேர்ந்த பஞ்சசீலா ஜாம்தார் என்பதும், அவரை கொலை செய்தவர் தீபக் போர்சே என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman kill running auto in mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->