புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட பெண் கைதி - காரணம் என்ன?
woman prison sucide in puzhal jail
சென்னையில் உள்ள புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பெண் கைதியான காந்திமதி கடந்த 2014-ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில், தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரை கட்டி போட்டுவிட்டு 12 சவரன் நகைகளையும், 45 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியில், மூதாட்டியை கொன்று நகை கொள்ளை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமீன் கிடைத்தது.
ஆனால், அவருக்கு உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர முன்வராததால், மன உளைச்சலில் இருந்து வந்த காந்திமதி சிறை வளாகத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் கைதிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
woman prison sucide in puzhal jail