மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் - தொடங்கியது இடத்தை தேர்வு செய்யும் பணி.! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கடந்த மாதம் 26-ந்தேதி உயிரிழந்தார். அவரது உடல் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, மத்திய அரசு மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கு இடம் ஒதுக்க ஒப்புதல் வழங்கியது. 

இது குறித்த தகவல் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளது. 

அதாவது நினைவிடம் அமைப்பதற்காக ராஜ்காட், ராஷ்டிரிய ஸ்மிரிதி தளம் அல்லது கிசான் காட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்யும்படி மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

work start select manmohan singh memorable place


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->