மைனர்பெண் பலாத்காரம்.! தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.!
Worker sentenced to 20 years rigorous imprisonment for raping minor girl in Karnataka
கர்நாடகா மாநிலத்தில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள உதிரிவட்டிகேரி கிராமத்தை சேர்ந்தவர் காபி தோட்ட தொழிலாளி சந்திரப்பா ஈரப்பா(42). இவருக்கும் மைனர் பெண் ஒருவருக்கும், கடந்த 2020ஆம் ஆண்டு செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மைனர் பெண்ணை, காப்பி தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மைனர் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்திரப்பா ஈரப்பாவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு ஹாவேரி போக்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சந்திரப்பாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காமல் சிறை தண்டனையும், ரூபாய் 1.60 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அபராத தொகையில் ரூ.1.50 லட்சம் மற்றும் அரசு சார்பில் ரூபாய் 2.50 லட்சம் என மொத்தம் ரூபாய் 4 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
English Summary
Worker sentenced to 20 years rigorous imprisonment for raping minor girl in Karnataka