இந்தியாவில் UPI மூலம் 50% பண பரிவர்த்தனை! G20 மாநாட்டில் உலக வங்கி பாராட்டு!
World Bank praises India for UPI transactions
உலக வங்கியால் தயாரிக்கப்பட்ட G20 கொள்கை ஆவணத்தின் படி "கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 50% டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான வங்கி செலவீனமானது 23 டாலரில் இருந்து 0.1 டாலராக குறைந்துள்ளது.
கடந்த மார்ச் 2022 நிலவரப்படி, நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.14%க்கு சமமான அதாவது 33 பில்லியன் டாலரை இந்தியா மொத்தமாகச் சேமித்துள்ளது. இந்த G20 உலகளாவிய கூட்டாண்மை நிதிச் சேர்க்கை (GPFI) நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பிரதிநிதித்துவப்படுத்தும் G20 இந்தியாவின் வழிகாட்டுதல் மற்றும் உள்ளீடுகளுடன் உலகளாவிய கூட்டான்மை நிதி சேர்க்கை நிதி அமைச்சகம் செயல்படுத்த உதவும்" என்று உலக வங்கியால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் நிதிச் சேர்க்கை முன்னணியில் இந்தியா இந்த வெற்றிகளை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் 6 ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் 80% நிதி உள்ளடக்க விகிதத்தை அடைந்துள்ளது.
ஜன்தன் வங்கிக் கணக்குகள் மற்றும் மொபைல் ஃபோன்களுடன் ஆதார் போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை அமல்படுத்துவது, பரிவர்த்தனை கணக்குகளின் உரிமையை 2008ல் ஏறத்தாழ நான்கில் ஒரு பங்கு என இருந்து இப்போது 80 சதவீதத்திற்கு மேல் மாற்றுவதில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படுகிறது.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) கணக்குகளின் எண்ணிக்கை மார்ச் 2015ல் 147.2 மில்லியனிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்து ஜூன் 2022க்குள் 462 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த கணக்குகளில் 56% பெண்கள் அதாவது 260 மில்லியனுக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர்.
இது இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிடும் வகையில் இதில் மேலும் செயல்படுத்தும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான தலையீடுகள், கணக்கு உரிமையை விரிவுபடுத்துவதற்கான தேசிய கொள்கைகள், அடையாள சரிபார்ப்புக்கு ஆதாரை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும் என உலக வங்கி சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
World Bank praises India for UPI transactions