யோகி ஆதித்யநாத் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு..அவசரமாக தரையிறங்கியது!
Yogi Adityanaths flight suffers snag Landed in a hurry
விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டபோது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். அந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து 8 ஆண்டு நிறைவடைந்து உள்ளது.இந்தநிலையில் அதனை கொண்டாடும் வகையில் நேற்று அரசு சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி ஆக்ராவில் நடைபெறஇருந்தது.அப்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை விமானம் மூலம் லக்னோ புறப்பட்டார்.
ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் உடனடியாக ஹிரியா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
அதன்பின், கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதே விமானத்தில் லக்னோ புறப்பட்டுச் சென்றார்.இதனால் உத்தர பிரதேச மாநிலத்தில் பரபரப்பு நிலவியது .
விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டபோது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Yogi Adityanaths flight suffers snag Landed in a hurry