வேலை கிடைக்காத விரக்தி - தனக்கு தானே இரங்கல் போஸ்டர் அடித்த வாலிபர்.. கர்நாடகாவில் பரபரப்பு.!!
youth publish rip poster in karnataga
நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். அதனால், அவர்கள் பல்வேறு செயலியின் மூலம் வேலைவாய்ப்பினைத் தேடி வருகின்றனர். ஆனால் அந்த செயலியின் மூலமும் சிலருக்கு வேலை கிடைக்காமல் இருந்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் வேலை கிடக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தனக்கு தானே இரங்கல் போஸ்டர் அடித்து பதிவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பிரசாந்த் ஹரிதாஸ் என்பவர் LinkedIn செயலியின் மூலம் மூன்று ஆண்டுகளாக வேலை தேடியுள்ளார். ஆனால், அவரை எந்த நிறுவனமும் பணிக்கு எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அதே செயலியில் தனக்கு தானே இரங்கல் போஸ்டரை பதிவு செய்துள்ளார். இது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
English Summary
youth publish rip poster in karnataga