உங்களுக்கு நெஞ்சு எரிச்சல் இருக்கிறதா? உடனடியாக சரியாக்கும் வீட்டு வைத்தியம்..!
acidity remedies
சிலருக்கு இன்றைய உணவு பழக்க வழக்கங்களால் நெஞ்செரிச்சல் ஏற்படும். அவற்றை குணமாக்க வீட்டு வைத்தியத்தை வைத்து சரிசெய்யலாம். எப்படி என பார்போம்.
கற்றாழை சாறு :
கற்றாழை சாறு உடலுக்கு பல நன்மைகளை தரவல்லது. சிலருக்கு அசிடிட்டி பிரச்சனை தொடர்ந்து ஏற்படும் அவர்கள் அனைவரும் சாப்பிடுவதற்கு முன்பு கற்றாழை சாற்றை குடித்து வர நெஞ்சு எரிச்சல் குணமாக்கும். கற்றாழை குளிர்ச்சி என்பதால் குளுர்ச்சியான பொருள் பக்கவிளைவை உண்டாக்குமெனில் இந்த முறையை தவிர்க்கவும்.
மஞ்சள் கடுகு :
மஞ்சள் கடுகு செரிமானத்தை அதிகரிக்க உதவும். மஞ்சள் கடுகு அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையிலிருந்து விடுபட பயனுள்ளதாக இருக்கும். லஸ்சியில் சிறிது மஞ்சள் கடுகு பொடி சேர்த்து குடிக்கலாம்.
ஆப்பிள் வினிகர் :
உடலுக்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை அரை கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்தால், அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சலை குணப்படுத்துவதில் உதவுகிறது.