கேன்சர் நோயினை தடுக்கும் கத்தரிக்காய்!
Brinjal prevents cancer disease
நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்டு காய்கறியான கத்தரிக்காயில் இத்தனை சத்துக்களும் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றனவா? என்ற கேள்விக்கு பதில், ஆம் என்பதுதான் உண்மை.
கேன்சர் நோயினை தடுக்கும் மிகச் சிறந்த ஒரு மருந்தாக கத்தரிக்காய் விளங்குகிறது. கத்தரிக்காயில் இருக்கக்கூடிய 'சோலசோடின், ரம்னோசில், கிளைகோசைடுகள் இந்த மூலக்கூறு, நம் உடலானது புற்று நோய்க்கு எதிராக போராடும் தன்மையை அதிகரிக்கிறது.
கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகம், ஆனால் கலோரிகள் குறைவு. இவை இரண்டும் நம் உடல் எடை அதிகரிப்பை குறைக்க உதவுகின்றன.
கத்தரிக்காய், ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கிறது. இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிபினால்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன.
கத்தரிக்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் கொண்ட நிறமியான ஆன்தோஸையனின்கள் அதிகம் உள்ளன. இதை நம் உடலில் இருக்கும் நல்ல செல்கள் அழிவதை தடுக்கின்றன.
கத்தரிக்காய் இரத்தத்தில் உள்ள எல் டி எல் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் நம் உடலை இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது .
English Summary
Brinjal prevents cancer disease