இந்த ஆம்லெட் சாப்பிட்டு இருக்ககீங்களா... உடனே செய்யுங்கள்.. சூப்பர் ஆம்லெட் ரெசிபி...!
Crab Omblette Recipe Tamil
ஆம்லேட் என்றால் பொதுவாக முட்டையில் செய்வது என தான் எண்ணி கொள்வோம். ஆனால் நண்டில் சூப்பரான ஆம்லேட் எப்படி செய்யலாம் என பார்போம்.
தேவையானவை:
சுத்தம் செய்த நண்டு- 3
பெரிய வெங்காயம் (நறுக்கியது)- ஒன்று,
தட்டிய சின்ன வெங்காயம்- 4,
இஞ்சி, பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன்,
சீரகத்தூள், மல்லித்தூள்- தலா ஒன்றரை டீஸ்பூன்,
சோம்புத்தூள், மஞ்சள் தூள்- தலா கால் டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை- சிறிதளவு,
உப்பு- தேவையான அளவு.
ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்
முட்டை-2
தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதலில் சுத்தம் செய்த நண்டை வெங்காயம், இஞ்சி, பூண்டு சீரகம் சோம்பு என அனைத்து பொருட்களையும் சேர்த்து வாணலியில் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
பின்னர் நண்டின் சதைபகுதியை பிரித்தெடுக்கவும். அந்த தண்ணீரை கிரேவி பதம் வரும் வரை வற்ற வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டை, நண்டின் சதைப்பகுதி, 2 டேபிள்ஸ்பூன் நண்டு வேகவைத்த கிரேவி மற்றும் சிறிதளவு உப்பு(தேவைப்பட்டால்) சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.
பின்னர் அடுப்பில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு நண்டு, ஆம்லெட் கலவையை உற்றி இருபுறமும் புரட்டிபோட்டு வேகவைத்து சூடாக எடுத்து பரிமாறவும். இப்போது நண்டு ஆம்லெட் ரெடி.
English Summary
Crab Omblette Recipe Tamil