கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லது! ஆனா இந்த பழங்களுடனும்,காய்கறிகளுடன் சாப்பிட்டால் தீமை!
Eating cucumbers in summer is good But eating them with these fruits and vegetables is bad
கோடை வெயிலை சமாளிக்க வெள்ளரிக்காய் உணவில் சேர்ப்பது சிறந்த தேர்வு. இதில் உள்ள அதிகமான நீர் சத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், சில உணவுகளுடன் வெள்ளரிக்காயை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உணவுகளை தவிர்த்தால், செரிமான பிரச்சனைகள், வயிற்று உப்புசம், வாயு, மற்றும் உடல் வெப்ப நிலை மாற்றம் போன்ற பாதிப்புகளை தடுக்கலாம்.
வெள்ளரிக்காயுடன் சேர்க்கக்கூடாத உணவுகள்
தயிர் + வெள்ளரிக்காய்
- தயிரில் புரதம் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளதால் ஜீரணிக்க சற்று நேரம் எடுக்கும்.
- வெள்ளரிக்காய் சீக்கிரமாக ஜீரணமாகும்.
- இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், வாயு, மற்றும் செரிமான கோளாறு ஏற்படும்.
சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை) + வெள்ளரிக்காய்
- சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை உடையது, வெள்ளரிக்காய் குளிர்ச்சி தன்மை உடையது.
- இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
தக்காளி + வெள்ளரிக்காய்
- தக்காளியில் அமிலத்தன்மை மற்றும் விதைகள் அதிகம்.
- வெள்ளரிக்காய் விரைவாக ஜீரணமாகும், ஆனால் தக்காளி அதிக நேரம் எடுக்கிறது.
- இதனால் வயிற்று வீக்கம், வாயு, மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
முள்ளங்கி + வெள்ளரிக்காய்
- இது உடலுக்கான வைட்டமின் C அளவை குறைக்கும்.
- வயிற்றில் அசெளகரிய உணர்வு ஏற்படுத்தும்.
இறைச்சி + வெள்ளரிக்காய்
- இறைச்சியில் அமிலத்தன்மை மற்றும் அதிக புரதம், கொழுப்பு உள்ளதால் செரிமானம் அதிக நேரம் எடுக்கும்.
- வெள்ளரிக்காய் விரைவாக ஜீரணமாகும், இதனால் வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படும்.
இப்போது தெரியவந்துவிட்டது அல்லவா? வெள்ளரிக்காயை எந்த உணவுகளுடன் சேர்க்கக் கூடாது!
இந்த கோடையில் ஆரோக்கியமாக இருக்க, உணவுகளை சரியாக தேர்வு செய்யுங்கள்!
English Summary
Eating cucumbers in summer is good But eating them with these fruits and vegetables is bad