முட்டையில் கட்லெட்டா? - வாங்க பார்க்கலாம்.!
egg katlet
முட்டையில் கட்லெட் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு
முட்டை
மிளகாய்த்தூள்
பால்
வெண்ணெய்
மைதா
ரஸ்க் தூள்
எண்ணெய்
செய்முறை
முட்டையை வேகவைத்து தோல் உரித்து வட்டமாகவோ அல்லது உங்களுக்கு பிடித்ததுபோல் வெட்டிக்கொள்ளவேண்டும்.
இதையடுத்து வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து, பால், வெண்ணெய், உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும்.
உருளைக் கிழங்கு கலவையை அதன் உள்ளே முட்டையை வைத்து சுற்றிலும் முட்டை வெளியே தெரியாமல் மூடி, வட்டவடிமாக கட்லெட்களாக தட்டிக்கொள்ளவேண்டும்.
பின்னர் மைதா மாவில் தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் போட்டுத் தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவேண்டும்.
தொடர்ந்து கடாயில் எண்ணெய் சூடானவுடன், செய்து வைத்துள்ள கட்லெட்களை மைதாமாவில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவேண்டும்.