அவல் லட்டு செய்வது எப்படி?
how to make aval laddu
அவலில் லட்டு செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
அவல்
பொட்டுக்கடலை
முந்திரி
திராட்சை
ஏலக்காய்ப்பொடி
பால்
சர்க்கரை
தேங்காய்துருவல்
செய்முறை:-
அவல், பொட்டுக்கடலை இரண்டையும் தனித்தனியே வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய் பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.