மணமணக்கும் கேரளா ஸ்டைல் உண்ணியப்பம்.!
how to make kerala style unniyappam
கேரளா ஸ்டைலில் உண்ணியப்பம் செய்வது எப்படி? என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி, புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெல்லம், தேங்காய், ஏலக்காய், முந்திரி பருப்பு, நெய், எண்ணெய், உப்பு.
செய்முறை:-
முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாசிபருப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஊற போட வேண்டும். ஊறிய பின் நீரை வடிகட்டி அரைக்க வேண்டும். இதில் ஏலக்காய், வெல்லம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.
இந்த மாவை இரண்டில் இருந்து மூன்று மணி நேரங்கள் மூடி வைக்கவும். பின்னர் முந்திரிகளை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதையடுத்து ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கி பணியார சட்டியில் ஊற்றவும்.
அதில் மாவை ஊற்றி இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்து வைக்க வேண்டும். இதனை மீண்டும் எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால், சுவையான உண்ணியப்பம் தயார்.
English Summary
how to make kerala style unniyappam