மணமணக்கும் மக்ரோனி - ஈஸியா எப்படி செய்வது?
how to make macaroni
தேவையான பொருட்கள்:-
மக்ரோனி
எண்ணெய்
வெங்காயம்
தக்காளி
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லி தூள்
கரம் மசாலா தூள்
தக்காளி சாஸ்
உப்பு
செய்முறை-
முதலில் மக்ரோனியாவை தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு வைத்து எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் மக்ரோனியாவை கழுவி எடுத்து வைக்க வேண்டும்.
இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கி அதனுடன் தக்காளி மல்லி தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இதில் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி மூடி வைக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான மக்ரூனியா தயார்.