மணமணக்கும் பால் கொழுக்கட்டை - எப்படி செய்வது?
how to make pal kozhukattai
விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான். இதில் ஒன்று பால் கொழுக்கட்டை. அதை எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருள்கள்
தேங்காய் பால்
பசும் பால்
இடியாப்ப மாவு
ஏலக்காய் தூள்
துருவிய தேங்காய்
உப்பு
சர்க்கரை
தயாரிக்கும் முறை:-
முதலில் இடியாப்ப மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் ஒரு சர்க்கரை, துருவிய தேங்காய் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதில் கொஞ்ச மாவை தனியாக எடுத்து வைக்க வேண்டும். பிறகு சுடு தண்ணீரை மீதமுள்ள மாவில் கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து சிறிது நேரம் ஆற விட்டு, அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், பசும் பால், மற்றும் எடுத்து வைத்திருக்கும் மீதமுள்ள இடியாப்ப மாவையும் போட்டு நன்கு கலக்கி கொதிக்க வைக்கவும். அதில் உருட்டி வைத்த கொழுக்கட்டை உருண்டைகளை சேர்த்து 15 முதல் 20 நிமிடம் வரை அப்படியே வேக விட வேண்டும்.
அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கிளர வேண்டும். அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூளை தூவி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
English Summary
how to make pal kozhukattai