சுவையான வாழைப்பழ பர்பி.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான வாழைப்பழ பர்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 3

வெல்லம் - 100 கிராம்

நெய் - 8 டீஸ்பூன்

கோதுமை மாவு - 150 கிராம்

ஏலக்காய்த் தூள் - 2 டீஸ்பூன்

பொடித்த பாதாம - சிறிதளவு

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

பின்பு அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில், வெல்லத்தைப் போட்டு அது கரையும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.

பின்பு வேறொரு பாத்திரத்தில் 6 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தி, கோதுமை மாவு சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.

பின்பு அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழக் கலவையை கொட்டி 10 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.

பின்பு வடிகட்டிய வெல்ல நீர் மற்றும் ஏலக்காய் தூளைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். பிறகு 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கலந்து இறக்கவும்.  

இந்தக் கலவையை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி, பொடித்த பாதாமை அதன் மேல் தூவி, விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும். அவ்வளவுதாங்க சுவையான வாழைப்பழ பர்பி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty Banana burfi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->