பல வலிகளுக்கு நிவாரணம் தரும் உளுத்தங்களி.!
how to make ulunthu kali
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, முதுகு வலி, கால் வலி உள்ளிட்ட வலிகளை நீக்குவதற்கு உளுந்து களி சிறந்த மருந்தாக இருந்து வருகிறது. இப்படி பல்வேறு நன்மைகளை உடைய உளுந்துக்களியை சில நிமிடங்களில் எப்படி செய்யலாம் என்று இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
உளுந்து
பச்சரிசி
வெந்தயம்
நல்லெண்ணெய்
கருப்பட்டி
செய்முறை :-
முதலில் உளுந்து, பச்சரிசி மற்றும் வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நன்கு ஊறிய பின் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் அரைத்து வைத்த மாவு கலவையை ஊற்றி தண்ணீர் வற்றும் அளவிற்கு கிளறி விட வேண்டும்.
மாவு கெட்டியான பதத்திற்கு வரும்போது நல்லெண்ணையை ஊற்றி நான்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.