பிள்ளையாருக்கு கொழுக்கட்டை செய்ய போகிறீர்களா? வழக்கமான கொழுக்கட்டை செய்யாமல் இதை செய்யுங்கள்..! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கடை தான் முதலில் நியாபகத்திர்கு வருவது கொழுக்கட்டை தான். வழக்கமாக கொழுக்கட்டை போல் அல்லாமல் சத்தான கேழ்வரகு கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு படைக்கலாம்.

தேவையானவை :

மேல் மாவிற்கு:

கேழ்வரகு மாவு - 250 கிராம்
 தண்ணீர் - 1/2 லிட்டர்
எண்ணெய் - 50 மி.லி., 
உப்பு - 20 கிராம். 

பூரணத்திற்கு :

எள் - 100 கிராம் (பொடிக்கவும்), 
கருப்பட்டி - 200 கிராம்
முழு தேங்காய் - 2 (துருவியது)
நெய் - 10 கிராம்
ஏலக்காய் - 25 கிராம் (பொடிக்கவும்).

செய்முறை :

மிதமான தீயில் கேழ்வரகு மாவை வறுத்து கொள்ளவும்.வறுத்த மாவு ஆறியதும் உப்பு, வெந்நீர், எண்ணெய் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளுங்கள். பூரணம் செய்ய கடாயை வைத்து பொடித்த எள், தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள், கருப்பட்டியை சேர்த்து கிளறவும். இந்த பூரணத்தை இறக்கி சிறிது ஆறியதும் மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து உள்ளே பூரணத்தை வைத்து தேவையான வடிவில் செய்து வைத்து கொள்ளவும். அதன்பின்னர், இட்லி பானையில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான கேழ்வரகு கொழுக்கட்டை தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kezhvaraku Kozhukattai Recipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->