வாயு பிரச்சனைகளை நீக்கி., ஆரோக்கியம் பெற சுவையான முள்ளங்கி பிரியாணி.!
preparation for mullangi briyani
தேவைப்படும் பொருட்கள் :
முள்ளங்கி - கால் கிலோ
உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி - தேவைக்கு
ஏலக்காய், கிராம்பு,
அன்னாசிப்பூ - தலா 1
மராட்டி மொக்கு - 2 துண்டு
பட்டை - 1 துண்டு
பிரிஞ்சி இலை - 1
புதினா - கால் கட்டு
வெங்காயம், தக்காளி - தலா 1
இஞ்சி - பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி - 200 கிராம்
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்யும் முறை :
பிரியாணி அரிசியை இருபது நிடமிங்கள் ஊறவைத்து, முக்கால் பதம் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில் நெய்யையும் எண்ணெய்யையும் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
பின்னர் முள்ளங்கியைப் போட்டு வதக்கி, வதக்கக்கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தயிர் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
வேகவைத்து எடுத்துவைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து குக்கரை அப்படியே மூடி, ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டால் முள்ளங்கி பிரியாணி தயார்.
English Summary
preparation for mullangi briyani