டிப்ஸ்.! டிப்ஸ்.! டிப்ஸ்.! - சமையலில் இதை மட்டும் செய்து பாருங்கள்.. சுவை அள்ளும்.! - Seithipunal
Seithipunal


* ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து காய்ச்சிய பாலில் ஊற வைத்து பிறகு சர்க்கரை பாகு செய்து கேசரி கிளறினால் சுவை இரட்டிப்பாகும். 

* வாழை இலையின் பின்புறத்தை தனலில் காட்டி அதன் பிறகு உணவை பொட்டலமாக கட்டினால் இலை எவ்வளவு மடக்கினாலும் கிழியாது.

* பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.

* தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எல்லை வெறுத்து பொடி செய்து கலந்தால் மனமாகவும் சுவையாகவும் இருக்கும்.

* அரிசியையும், பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்து களைந்து விட்டு வெண்பொங்கலோ சர்க்கரைப் பொங்கலோ செய்தால் பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும், வாசனையாகவும் இருக்கும்.

* பாகற்காய் வறுவல் செய்யும் போது காயை எண்ணெயில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால் மொறுமொறுப்பு குறையாமல் இருக்கும்.

* உருளைக்கிழங்கை அரை மணி நேரம் உப்பு தண்ணீரில் ஊற வைத்துவிட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

* சாம்பார் பொடி அரைக்கும் போது அத்துடன் ஒரு கைப்பிடி கல்லுப்பு போட்டு அரைத்தால் வண்டுகள் பூச்சிகள் வராது.

* சூடான எண்ணெயில் சிறிதளவு மைதா மாவு சேர்த்து பிறகு எதை போட்டு எடுத்தாலும் வானலில் ஒட்டாது.

* துவரம் பருப்பை வேகவைக்கும் போது சிறிய தேங்காய் துண்டை நறுக்கி போட்டால் பருப்பு விரைவில் வெந்துவிடும்.

* தோசைக்கு மாவு அரைக்கும் போது கொஞ்சம் வெண்டைக்காயையும் சேர்த்து அரைத்தால் தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

samaiyal tips


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->