கோடை வெயிலுக்கு... டேஸ்டியான குளுகுளு சாக்லேட் புட்டிங்.! எப்படி செய்வது.? - Seithipunal
Seithipunal


அடிக்கிற வெயிலுக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான சாக்லேட் புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

பால் - 1½ கப் 

பிரெஷ் க்ரீம் -1 ஸ்பூன் 

வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன் 

பேக்கிங் கொக்கோ பவுடர் - 1/4 கப் 

சர்க்கரை - 7 டேபிள்ஸ்பூன்

சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

துருவிய சாக்லேட் - தேவையான அளவு

செய்முறை:

•முதலில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும். 

•இதையடுத்து அடுப்பில் மிதமான தீயில் இந்தக் கலவையை அவைத்து கலக்கிக் கொண்டே இருக்கவும். பிறகு கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும். பின்பு அதில் வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி நன்றாக கலக்கவும்.

•பிறகு கப்களில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து சுமார் 3 மணி நேரம் வரை குளிர வைக்கவும். இதையடுத்து நன்றாகக் குளிர்ந்ததும், துருவிய சாக்லேட் மேலே தூவி, பிரெஷ் க்ரீம் சேர்த்தால் சாக்லேட் புட்டிங் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty chocolate pudding recipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->