பெண்களே! தனியா ஊர் சுத்திப் பார்க்க 'ட்ரிப் ப்ளான்' பண்றீங்களா? அப்போ உங்களுக்காக சில டிப்ஸ்! - Seithipunal
Seithipunal


பயணங்கள் எப்போதுமே மனிதனுக்கு புத்துணர்ச்சியையும் புதிய அனுபவத்தையும் கொடுக்கக் கூடியவை. பெரும்பாலானவர்கள் குடும்ப பயங்களை விரும்பினாலும் சிலருக்கு தனிப் பயணங்களை புதுவிதமான அனுபவங்களையும்  மகிழ்ச்சியையும் தரக் கூடியவையாக இருக்கும்.

அதிலும் பெண்கள் தனியாக பயணம் செய்வது என்பது இந்த நவீன உலகத்தில் கூட சிறிது தயக்கத்துடனே  மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அவ்வாறு தனியாக பயணம் செல்ல விரும்பும் பெண்கள்  தங்கள் பயணம் பாதுகாப்பாக அமையவும் புது அனுபவமாக இருக்கவும் பயனுள்ள சில குறிப்புகளை பார்க்கலாம்.

நீங்கள் தனியாக பயணம் செல்ல விரும்பினால் நீங்கள் போகக்கூடிய இடம் அந்த இடத்தில் நீங்கள் பார்க்க சுற்றுலா தளங்கள்  அவற்றிற்கான போக்குவரத்து வசதிகள்  போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் சுற்றுலா தலங்களிலிருந்து நம் தங்கும் இடத்திற்கான தூரம் ஆகியவற்றை முதலிலேயே குறிப்பிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இது நமது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு நமது பாதுகாப்பையும்  உறுதி செய்யும் ஒன்றாகும்.

தனியாக பயணிக்கும் போது முடிந்தவரை உங்களால் தூக்கக்கூடிய லகேஜ்களிலிருந்து  சற்று குறைவாகவே லகேஜ் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் உங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெப்பர் ஸ்பிரே  சிறிய ஷாக் இயந்திரம், மல்டி பர்ப்பஸ் கத்தி  போன்றவற்றையும் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் சானிட்டரி நாப்கின், கேன்வாஸ், சானிடைசர் போன்ற சுகாதாரப் பொருட்களையும் கைகளில் வைத்திருப்பது எப்போதும் நல்லது.

பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே நமக்கு தேவைப்படும் உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் போன்றவற்றை வாங்கி நம் பைகளில் வைத்திருப்பது நமது பயண நேரத்தை மிச்சப்படுத்துவதோடு பாதுகாப்பான ஒன்றாகும். இதனால் தேவையில்லாமல் ஒவ்வொரு இடத்திலும் இறங்கி ஏற வேண்டிய சூழல் ஏற்படாது. குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை எப்போதும் நம் பைகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பயணங்களுக்கு திட்டமிடும்போது  நமது பட்ஜெட்டை தாண்டி கொஞ்சம் அதிகமான பணத்தை கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் ஆன்லைன் பண பரிவர்த்தனையை எப்போதும் நம்பி இருக்க வேண்டாம். சில இடங்களில் அவை வேலை செய்யாமல் போகலாம். சில இடங்களில் நெட்வொர்க் கவரேஜ் இல்லாமல் இருக்கலாம். அதனால் கைகளில் எப்போதும் நமது அடிப்படை தேவைகளுக்கான பணமிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பணத்தையும் ஒரே இடத்தில் வைக்காமல்  நம் கைகளில் கொஞ்சம்  பேக்கில் கொஞ்சம் ஆடைகளுக்குள் கொஞ்சம் என பிரித்து பிரித்து வைப்பது பாதுகாப்பிற்கு உதவும்.

மலிவான தங்குமிடங்களை தேர்ந்தெடுக்கும் போது அவற்றின் மதிப்பீட்டை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது அவசியம். மேலும் தங்குமிடம்  ஆள் நடமாட்டமிகுந்த மற்றும் ஊருக்குள்  அமைந்திருக்குமிடமாக பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது. பெண்கள் தனியாகச் செல்லும் போது ஹோட்டல்களை தேர்வு செய்யாமல் மகளிர் விடுதிகளை தேர்ந்தெடுப்பது சிறந்ததாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips to be noted for solo women trip


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->