சத்தான 'வெஜிடபிள் பாசிப்பருப்பு இட்லி' இப்படி செய்து பாருங்க.!
vegetable moong dal Idli recipe tamil
சுவையான ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் பாசிப்பருப்பு இட்லி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு
புழுங்கல் அரிசி
உளுத்தம் பருப்பு
காய்கறிகள்
பச்சை மிளகாய்
இஞ்சி
கொத்தமல்லி
உப்பு
செய்முறை:
புழுங்கல் அரிசி உளுத்தம் பருப்பு மற்றும் பாசிப்பயறு மூன்றையும் ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள பருப்பு, அரிசி பச்சை, மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய், கடுகு சேர்த்து தாளித்து தேவையான காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மாவில் காய்கறிகளை சேர்த்து தேவையான அளவுக்கு உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து பரிமாறினால் அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி தயார்.
English Summary
vegetable moong dal Idli recipe tamil