தலைமுதல் கால் வரை பயன்தரும் கற்றாழைச்சாறு.!  - Seithipunal
Seithipunal


* உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தினமும் காலையில் கற்றாழைச்சாறை பருகலாம். இது உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிப்பதுடன், கலோரிகளை எரிக்கும் தன்மை கொண்டது.

* கழிவுகளை அகற்றும் தன்மையால் கற்றாழை உங்கள் குடலை சுத்தம் செய்யும். மலச்சிக்கலால் நீங்கள் அவதிப்பட்டீர்கள் என்றால், இந்த கற்றாழைச்சாறை குடிப்பதால் குணமாகும்.

* உங்கள் காலையை கற்றாழைச்சாறுடன் துவங்கினால், அது உங்களுக்கு முகப்பருக்களற்ற, தெளிவான சருமத்தைத்தரும். உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

* இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கரும்புள்ளிகளை அகற்றுகிறது. தினமும் காலையில் கற்றாழைச் சாற்றை பருகினால், உங்கள் சருமம் பளபளக்கும், சருமத்தின் நிறம் அதிகரித்து பளபளவென மின்னுவீர்கள்.

* கற்றாழைச்சாறு, செரிமான கோளாறுகளை நீக்கி, நாள் முழுவதும் அவை எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது. அல்சர், வாயுத்தொல்லை, அசிடிட்டி இருப்பவர்களுக்கு இது இயற்கை மருந்தாகிறது. இதில் உள்ள சக்திவாய்ந்த எண்சைம்கள், உங்கள் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.

* தினமும் கற்றாழைச்சாறை பருகினால், அது உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. உங்கள் குடல் நுண்ணுயிர்களின் ஆரோக்கியத்தை காக்கிறது.

* கற்றாழைச்சாறு உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அள்ளித்தரும். இதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்துக்கள், உங்கள் உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலை நீர்ச்சத்துடன் வைக்கிறது. 

* கற்றாழைச்சாறை பருகுவது உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் உடற்பயிற்சிகள் செய்யும்போது உங்களுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of aleo juice


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->