இந்த விதை 1 போதும்.. 1 மாதத்தில்.. 10 கிலோ எடை குறைக்கலாம்.!
benefits of chea seeds initiates weight loss
உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கும். அதற்காக நாம் உடற்பயிற்சி நடைப்பயிற்சி போன்றவற்றை செய்வதோடு சமச்சீர் உணவையும் உட்கொண்டு உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பது அவசியம். அதிலும் சில உணவுகள் நமது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உணவுப் பொருள் தான் சியா விதை. இது நம் உடலை குளிர்ச்சியாக வைக்க பயன்படுவதோடு உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்பை துரிதப்படுத்துகிறது. இந்த சியா விதையை பற்றி இப்போது பார்ப்போம்.
சியா விதைகள் என்று அழைக்கப்படும் இந்த கருப்பு விதைகள் புரதம் மற்றும் நார் சத்துக்கள் நிறைந்தவை. இவற்றை நாம் உட்கொண்டால் அதிக நேரம் நமக்கு பசி எடுக்காமல் வயிறை முழுவதுமாக உணரச் செய்யும். இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான புரதம் மற்றும் நார்ச்சத்தின் காரணமாக உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வைக்கிறது. இதில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டும் நடந்திருக்கிறது.
உடல் எடை குறைப்பில் பயன்படும் சியா விதைகளை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
நாம் தினமும் குடிக்கும் தேநீர் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடான ஒன்றாகும். இனி தேநீருக்கு பதிலாக சியா விதைகளிலிருந்து தேநீர் தயாரித்து பருகலாம். தண்ணீரில் சியா விதைகளை கொதிக்க வைத்து பின்னர் அவற்றை வடிகட்டி ஒரு கோப்பையில் ஊற்றி குடித்து வருவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தயிருடன் சியா விதைகளை கலந்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கூடிய ஒன்றாகும். தயிர் உடல் செரிமானத்திற்கு உதவக்கூடிய ஒன்று என்று நாம் அறிந்ததே. அதனுடன் சியா விதைகளை சாப்பிடும்போது நம் உடலின் எடை இழப்பை துரிதப்படுத்துகிறது. இரவில் தண்ணீரில் சியா விதைகளை ஊற வைத்து காலையில் தண்ணீரை வடிகட்டி விட்டு சியா விதைகளை தயிருடன் கலந்து சாப்பிட வேண்டும்.
சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றிலிருந்து தண்ணீரையும் சியா விதைகளையும் சாப்பிட்டு வர நம் உடலின் எடை இழப்பு அதிகரிக்கும். மேலும் இது தொடை மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
English Summary
benefits of chea seeds initiates weight loss