கொரியன் ஸ்கின் டோனுக்கு முயற்சிக்கிறீங்களா.? இதை டிரை பன்னுங்க.!
Benefits of Rice flour face masks
முகத்தில் உள்ள கருமை படர்தல், பருக்கள், கரும்புள்ளிகள் வடுக்கள், முகம் பொலிவாக மாற என்று நிறைய நன்மைகளை இந்த பச்சரிசிமாவு ஃபேஸ் மாஸ்க் தருகிறது. அவை என்னென்னவென்று பார்ப்போம்!
முகத்தில் ஏற்படும் கருமையைத் தடுக்க:
அரிசிமாவு - 2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
இதை நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 - 15 நிமிடங்கள் வைத்துவிட்டு மிதமான வெந்நீரில் முகத்தை கழுவி வர கருமை மாறும்.
வறண்ட சருமத்திற்கு:
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
ஆலோவேரா ஜெல் - 2 டீ ஸ்பூன்
துருவிய வெள்ளரிக்காய் - 2 டீஸ்பூன்
இவையெல்லாம் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவினால் சருமம் மிருதுவாக மாறும்.
முகம் ஜொலிப்பதற்கு:
தக்காளி - 1
அரிசி மாவு 1 டீ ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
இவற்றை தக்காளி ஜூஸில் கலந்து திக் பேஸ்ட்டாக முகத்தில் தடவி 15 - 20 நிமிடங்கள் காய் விடவும் அதன்பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவி வர நல்லா பலன்கள் கிடைக்கும்.
English Summary
Benefits of Rice flour face masks