Freedom Fighter : தன் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்.. யார் இவர்?
Dheeran Chinnamalai History
தீரன் சின்னமலை:
வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதரை பற்றிய சிறிய தொகுப்பு...!!
பிறப்பு :
தீரன் சின்னமலை 1756ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி, பெரியாத்தா தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.
கல்வி :
தீரன் சின்னமலை இளமையிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர் பயிற்சியில் கற்றுத் தேர்ந்தார்.
விடுதலை போராட்டத்தில் தீரன் சின்னமலையின் பங்கு :
தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார்.
மைசூர் மன்னர் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். தீரன் சின்னமலையின் வீரத்தை அறிந்த மைசூர் மன்னன் திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். தீரன் சின்னமலை பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்த்து ஆங்கிலேயர்களின் படைகளை வீழ்த்தினர். இதேபோன்றே மூன்று மைசூர் போரிலும் வென்றனர்.
மூன்று தோல்விகளை அடைந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். நான்காம் மைசூர் போரில் தீரன் சின்னமலை மற்றும் திப்பு சுல்தான் கூட்டணியில் நெப்போலியனும் இணைந்தார். நான்காம் மைசூர் போரில் 1799ஆம் ஆண்டில், மே மாதம்4ஆம் தேதி திப்பு சுல்தான் போர் களத்திலே வீரமரணமடைந்தார்.
திப்பு சுல்தான் அவர்களின் வீரமரணத்திற்குப் பின்னர், கிழக்கிந்திய கம்பெனியின் 5ஆம் பட்டாளத்தை அழிக்க எண்ணிய தீரன் சின்னமலை, 1800ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி கோவைக் கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
1801ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்த தீரன் சின்னமலை வெற்றிக் கண்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1802ஆம் ஆண்டு சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ஆம் ஆண்டு அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.
தீரன் சின்னமலையின் மறைவு :
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை அவரின் சமையல்காரன் மூலம் அவரையும், அவரின் சகோதரர்களையும் கைது செய்தனர் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயர்கள் 1805ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி அன்று தீரன் சின்னமலையை தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.
English Summary
Dheeran Chinnamalai History