சர்க்கரை நோயாளிகள் மோர் குடிக்கலாமா? வேண்டாமா? - Seithipunal
Seithipunal


சர்க்கரை நோயாளிகளுக்கும் மற்றவர்களைப் போன்று அந்தந்த கால சீசனில் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற சிறுகுறு ஆசை ஏற்படும். அந்த வகையில் தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் சர்க்கரை நோயாளிகள் தாகத்தை தணிக்க தினந்தோறும் மோர் குடிக்கலாமா?அல்லது குடிக்க கூடாதா? என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறது இந்த விபரம்.

இதில் சர்க்கரை நோயாளிகளுக்கு மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம். கோடைகால  விபத்தின் காரணமாக மனித உடலில் ஏற்படும் நீர் இழப்பு சார்ந்த அசௌகரியங்களையும் நோய்களையும் தடுத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க சிறந்த பானமாக மோர் திகழ்கிறது.

மோரில் உள்ள ப்ரோபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு கிளைசெமிக் இன்டெக்ஸ் 35 என்று மிகக் குறைந்த அளவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பயமின்றி மூவரை தினமும் பருகி வரலாம்.

மேலும் ஊரில் உள்ள பிளாஸ்டிக் அமிலம் பாக்டீரியாக்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளின் (பிறப்பொருள் எதிரி) உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

மோரில் உள்ள கால்சியம் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை பலப்படுத்தி ஆஸ்டியோ போரோசிஸ் எலும்பு தேய்மானம் போன்ற எலும்பு நோய்களை வராமல் தடுக்கிறது. ஊரில் உள்ள ஸ்பிங்க்கோலைப்பிடஸ்  மற்றும் பயோ ஆக்டிவ் புரதங்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவையும் ரத்த அழுத்தத்தையும் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

மோரில் உள்ள MFGM (மில்க் ஃபாட் க்ளோபியூல் மெம்பரேன் ) பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. மோரில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தி ஈறுகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

diabetics drink buttermilk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->