உங்க வீட்டு குக்கரில் விசில் வரும் போது தண்ணீரும் வருதா..!? அப்போ 'இதை' பண்ணுங்க.. இனி தண்ணீர் வராது..!!
Do This To Avoid Water Leaking Problem In Pressure Cooker While Cooking
அந்தக் காலத்தைப் போல இல்லாமல் இப்போதெல்லாம் எல்லோரது வீட்டிலும் பிரஷர் குக்கர் தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. அரிசி, பருப்பு சமைப்பது, காய்கறிகள் வேக வைப்பது, மற்றும் பல்வேறு உணவுகளை சமைப்பதற்கு குக்கர் தான் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் சமையல் கேஸ் பெருமளவில் சேமிக்கப் படுகிறது. எனவே நேரமும் மிச்சமாகிறது.
ஆனால் குக்கரில் சமைக்கும் போது சில சமயம் விசில் அடிக்கும் போது தண்ணீர் வெளியே வரும். இதனால் அடுப்பு மற்றும் சமையல் மேடை முழுவதும் தண்ணீர் சிந்தி, சுத்தம் செய்வதற்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். அப்படி குக்கரில் தண்ணீர் வந்தால் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
1. குக்கரில் சமைக்கும் போது தண்ணீரை அதிகமாக வைக்க கூடாது.
2. அரிசி, பருப்பு ஆகியவற்றை குக்கரில் சமைக்கும் போது அதிக தீயில் வைத்து சமைத்தால் தண்ணீர் வெளியே வரும். எனவே இவற்றை குறைந்த தீயில் வைத்தே சமைக்க வேண்டும்.
3. குக்கரின் விசிலை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். அதில் அழுக்கு படிந்திருந்தால் தண்ணீர் வெளியே வரும்.
4. குக்கரில் போடப்படும் கேஸ்கட் எனப்படும் ரப்பரை எப்போதும் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பின்னரே சமைக்க வேண்டும். சில சமயங்களில் இந்த ரப்பர் தேய்ந்தும், அழுக்குகள் படிந்தும் இருக்கலாம். மேலும் ஒரு குக்கரில் இருந்து இன்னொரு குக்கருக்கு இந்த ரப்பரை மாற்றும்போதும் சரிபார்ப்பது நாளளது.
5. குக்கரின் மூடி எப்படி உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். மூடி பழையதாக இருந்தாலோ, அல்லது கீழே விழுந்து உடைந்திருந்தாலோ அதிலிருந்து பிரஷர் வெளியேறும். அப்போது தண்ணீரும் வெளியேற வாய்ப்புகள் அதிகம்.
English Summary
Do This To Avoid Water Leaking Problem In Pressure Cooker While Cooking