உஷார்... செயற்கை முறையால் பழுக்க வைக்கும் மாம்பழங்களை உண்டால் 'புற்று நோய்' வர வாய்ப்பிருக்கா? - Seithipunal
Seithipunal


கோடைகாலம் வந்துவிட்டாலே அது மாம்பழ சீசன் தான். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவையும் வாசமும்  எல்லோரையும் வசீகரித்து விடும். அத்தகைய தித்திப்பான மாம்பழங்களில்  நம் உடலுக்கு தேவையான பல்வேறு விதமான சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. ஆனால் இவற்றை செயற்கையாக பழுக்க வைக்கும் போது  இவற்றால் நம் உடலுக்கு பலவிதமான தீங்குகள் ஏற்படுகிறது.

தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்நாடுகளுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த பழங்கள் கொஞ்சம் காயாக இருக்கும் போதே அவற்றைப் பறித்து  இயற்கை முறையில் படுக்க வைக்கும் பழக்கம் தான் காலம் காலமாக இருந்து வந்தது. ஆனால் தற்காலங்களில் கால்சியம் கார்பைடு என்று அழைக்கப்படும் ரசாயன கற்களை பயன்படுத்தி  இவற்றை பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர்.

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களை உண்பதன் மூலம் ஒவ்வாமை,  வயிற்று எரிச்சல், வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. மேலும் இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும்  மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதை தடுப்பதற்கு  மாம்பழத்திற்கு பெயர்போன சேலம் மாநகரத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக மொத்த வியாபார கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சேர்க்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ  மாம்பழங்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால்  பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மொத்த வியாபாரிகளுக்கும் சில்லறை வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் செயற்கை முறையில்  பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களால் ஏற்படும் தீமைகள் பற்றி  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரை நிகழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Food safety officials advise on dangers of artificially produced mangoes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->