கர்ப்பகாலத்தில்.. இதையெல்லாம் சாப்பிட்டால் அவ்வளவு தான்.. உஷார்.! - Seithipunal
Seithipunal


கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் உணவு பழக்க வழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்களுக்கும் தங்களது குழந்தைகளுக்கும் தேவையான சத்துள்ள உணவை உண்பது அவசியமாகும். இளம் பெண்கள் தங்கள் கர்ப்ப காலங்களில் எந்த உணவை சேர்க்கலாம் எந்த உணவை சேர்க்க கூடாது என்பதை பார்ப்போம்.

கர்ப்ப காலங்களிலிருக்கும் பெண்கள் பொதுவாக பால், பருப்பு, சர்க்கரைவள்ளி கிழங்கு, மீன் வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் இருக்கக்கூடிய புரதங்கள், அமினா அமிலங்கள் மற்றும்  வைட்டமின்கள் தாய்க்கும் செய்க்குமான சத்தை கொடுக்கிறது.

மேலும் ப்ரோகோலி, முட்டைக்கோஸ், கீரை வகைகள், பெரிய பழங்கள் போன்ற நார் சத்துக்கள் மற்றும்  வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தையும் குழந்தைகளுக்கு  அதிகமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும். 

தாயின் கருவில் வளரும் குழந்தைகளுக்கு  சமைக்காத இறைச்சி வகைகள், டீ, காப்பி, ஈரல், சமைக்காத பால்  மற்றும் மதுபானங்கள் ஆகியவை கேடு விளைவிக்க கூடியதாகும். அதனால் இது போன்ற பொருட்களையும் தவிர்த்துக் கொள்வது நல்லது.

மேலும் அதிக மசாலா கலந்த  காரமான உணவுகளையும் கர்ப்பிணி பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவை செரிமானத்தைக் கடினமாக்கி உடலின் வேலையை இரண்டு மடங்காகவும் இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Foods must avoid eating during pregnancy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->