Freedom Fighter : இந்திய விடுதலையே எம் லட்சியம் என கருதியவர்... யார் இவர்.?!
Freedom Fighter bahath singh history
இந்திய விடுதலையே எம் லட்சியம்:
உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காக போராடி மடிந்து போனதால், இவர் 'மாவீரன்;" என அழைக்கப்பட்டார். துப்பாக்கிக் குண்டு ஏந்தி உயிரிழக்கத் தயாராக இருந்தவர். தன் உயிர் போகும் கடைசி தருணத்திலும் இந்தியாவின் விடுதலையை பற்றி மட்டுமே நினைத்தவர் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு...!!
பிறப்பு :
பகத் சிங் அவர்கள் 1907ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூர் மாவட்டத்திலுள்ள 'பங்கா" என்ற கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.
கல்வி :
லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியை தொடங்கிய பகத் சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களை படிக்க ஆரம்பித்து பொதுவுடைமை கொள்கைகளில் பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
விடுதலைப் போரட்டத்தில் பகத் சிங்கின் பங்கு :
ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பகத் சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது 'இந்திய விடுதலையே எம் லட்சியம்" என மண்ணின் மீது சத்தியம் செய்தார்.
'அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!" என முடிவுக்கு வந்தார். 1924ஆம் ஆண்டு, 'இந்துஸ்தான் குடியரசுக் கழகம்" என்னும் அமைப்பில் பகத் சிங் இணைந்தார். சுகதேவ் தபார், சிவராம் ராஜகுரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோர் இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.
1926ஆம் ஆண்டு பகத் சிங், 'நவ்ஜவான் பாரத் சபா" என்ற இளைஞர் அமைப்பை நிறுவினார். நாடு முழுவதும் இருந்து இந்திய இளைஞர்கள் இவரது சங்கத்திற்கு தங்களது ஆதரவினை கொடுத்தனர். 1928ஆம் ஆண்டு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கூடி 'இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம்" (ர்சுளுயு) என்று அந்த அமைப்பின் பெயரை மாற்றினார். ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்திய முதலாளிகளிடமிருந்தும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் பகத் சிங்.
1929ஆம் ஆண்டு, ஏப்ரல் 8ஆம் தேதி, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் நாடாளுமன்றம் வழக்கம்போல இந்திய மக்களுக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்க, அண்டமே அதிரும் வண்ணம் வெடிகுண்டை எறிந்தார். புகை மண்டலத்தை புயலாக கிழித்துக்கொண்டு 'இன்குலாப் ஜிந்தாபாத்" என முழங்கியபடியே வந்தார் பகத் சிங். பிறகு அவரே ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்தார். அவரை விட்டுவைத்தால் நம்மால் இங்கு இருக்க முடியாது என்று நினைத்த ஆங்கிலேயர்கள் உடனே அவரை கைது செய்தனர்.
போராளிகளுக்கு சிறைச்சாலையும் ஓர் பாடசாலை என்பதற்கேற்ப, சிறையினுள் வாசித்துக்கொண்டே இருந்தார் பகத்சிங். 151 நூல்களை வாசித்து, ஆறு சிறிய நூல்களை வெளியிட்டார். கையில் புத்தகங்கள் இல்லாமல் பகத் சிங்கை பார்க்கவே முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்போடு மத, மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தார் என்பதற்கு அவர் எழுதிய 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்ற நூல் சான்றாக உள்ளது.
பகத் சிங்கின் மறைவு :
பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசால் 1931ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.
English Summary
Freedom Fighter bahath singh history