காலையில் வெறும் வயிற்றில் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..?! இதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை தெரிஞ்சுக்கோங்க..!!
Health Benefits And Effects Of Drinking Milk in Empty Stomach Every Morning
பாலில் பல ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும் பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், கால்சியங்களும் நிறைந்துள்ளன. மூளை ஆரோக்கியத்திற்கு உகந்த பாலை சிலர் காலையில் குடிப்பார்கள். சிலர் மாலையில் குடிப்பார்கள். இது அவரவர் விருப்பம் தான் எனினும், பால் எப்போது குடித்தால் என்னென்ன விளைவுகளைத் தரும் என்று தெரிந்து கொள்வது நல்லது.
பலரும் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பர். ஆனால் காலை உணவுக்குப் பின்னர் தான் பாலைக் குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க குளிர்ந்த பாலைக் குடிக்கலாம்.
அதே போல் முழுதாக கொழுப்பு நீக்கப் பட்ட பாலைத் தான் குடிக்க வேண்டும். மேலும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் மற்றும் இதய நோய் பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக வெறும் வயிற்றில் பாலைக் குடிக்கவே கூடாது.
காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதை விட, காலை உணவுக்குப் பிறகு குடிப்பதையோ, அல்லது இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பால் குடிப்பதையோ தான் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம். இதனால் உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.
நீங்கள் லாக்டோஸ் சகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருந்தால் காலை உணவுக்கு முன் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இது உங்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாய்வு உள்ளிட்ட பிரச்சினைகளை உண்டாக்கும்.
English Summary
Health Benefits And Effects Of Drinking Milk in Empty Stomach Every Morning